எழுத்தே உனக்கு நன்றி !!!
பெருங்கோவம் புதைகிறதே ... இயலாமை தலை தூக்கி வாழ்கிறதே ... வறுமை எனும் சொல் என்னுள் வாடிக்கையானதால்!!! என்கோவம் தீர்த்த எழுத்தே ... ஆறுதல் நீயன்றோ ..என் ஆயுதம் நீயன்றோ கூடி சிரித்தேன் என சொல்லவும் நீ இருந்தாய் ... புலம்பி அழுதேன் என சொல்லவும் நீ இருந்தாய்.. என் அழுகைக்கு மடி தந்த என் எழுத்தே ... எனது பிம்பமான என் "எழுத்தே" உனக்கு நன்றி !!!