Posts

Showing posts from 2021

வாழ தெரியா - ஒரு மக்கிய மரம் நீ .!

உன் ஆசைகளை அசைபோட்டுக்கொள் ஒரு போதும் நெருங்காதே அதை ஒருபோதும் நெருங்காதே யாரையும் துணைக்கு அழைக்காதே . அனைத்தும் உதறியே செல்லும் - உனக்கே கொடுத்து கடமை செய்துகொண்டு செருப்பு போல் ஒதுங்கி கொள் உன் பணிமுடித்து .மற்றவர்களின் ஆசையே தேவையே உனது ஆசைகளும் தேவைகளும் .உனக்கென ஏதும் தனியே ஏதும் இல்லை  தள்ளியே  இரு --- பெரும் வலி நீ அனைவருக்கும் .உன் தடித்த வார்த்தைகள் யாரும் கேட்க  இயலா .உன் கோவம் மனிதம் கடந்து மிருகமாய் - மனசாட்சி கூட வெட்கி தலைகுனிகிறது   முடிந்ததை செய் உன் சிறு ஆசைகள் எல்லாம் இவுலகிரிக்கு பேராசை . தூரமாய் இரு , பிறவி பிழை நீ --- வாழ தெரியா - ஒரு மக்கிய மரம் நீ .! சரி ஆகட்டும் - கண்ணீர் துடைத்து அடுத்தது என்ன - கடக்கிறேன் மறைந்து நகர்கிறேன் - பாழாய்ப்போன மனம் - தன்னை சுற்றியே எல்லாம் நகர்கின்றன எனும் நினைப்பில் .!

கறுப்பன் .!

Image
We miss you கறுப்பா .! மூன்று நாட்களே எங்களோடு இருந்து விடைபெற்ற கறுப்பன் .! சில மாசமா என் மனைவி ஒரு நாய்க்குட்டி எடுத்து வளப்போம்னு சொல்லிட்க்கிட்டே இருந்தாங்க .நான் அதில் பெருசா ஆர்வம் காட்டவில்லை இருப்பது அபார்ட்மெண்ட்  என்பதால் .! என் மனைவி எப்போது நேரம் கிடைத்தாலும் நாய்க்குட்டி எடுத்துவரலாம் ஊரிலிருந்து என்று சொல்லி கொண்டே இருந்தார் .நான் கவனம் சேலத்து போலவே இருந்தேன் .! இருப்பினும் என்ன ஆனாலும் பரவலா இன்னும் கொஞ்சம் நாட்களில் வாங்கி விடுவோம் இல்லை நாட்டு குட்டி ஒன்றை எடுத்துவந்து தருவோம்னு ஒரு ஓரமா நினைத்து கொண்டு இருந்தேன் . நான்கு நாலுக்கு முன்னதாக Grocessory காக வெளியில் சென்று இருந்தேன் .ஒரு நாய் குட்டி ரோட்டில் எதாவது கிடைக்குமா என்று ரோட்டில் நின்று கொண்டு இருந்தது மாரு கணம் யோசிக்கவில்லை தூகிகொண்டேன்.சற்று பயந்தாலும் என் கையோடு ஒற்றிக்கொண்டது . பைக்கில் வரும் பொழுது என் மனைவி மற்றும் என் மகளின் சந்தோசம் எப்படி இருக்கும் என்பதை பற்றியே இருந்தது .வீடு வந்தடைத்தேன் , என் மனைவியும் மகளும் பேரானந்தத்தில் .!  நாங்கள் மூவரும் அந்த குட்டியை குளிக்கவைத்தோம் .பிறகு என...