கறுப்பன் .!
We miss you கறுப்பா .!
சில மாசமா என் மனைவி ஒரு நாய்க்குட்டி எடுத்து வளப்போம்னு சொல்லிட்க்கிட்டே இருந்தாங்க .நான் அதில் பெருசா ஆர்வம் காட்டவில்லை இருப்பது அபார்ட்மெண்ட் என்பதால் .!
என் மனைவி எப்போது நேரம் கிடைத்தாலும் நாய்க்குட்டி எடுத்துவரலாம் ஊரிலிருந்து என்று சொல்லி கொண்டே இருந்தார் .நான் கவனம் சேலத்து போலவே இருந்தேன் .!
இருப்பினும் என்ன ஆனாலும் பரவலா இன்னும் கொஞ்சம் நாட்களில் வாங்கி விடுவோம் இல்லை நாட்டு குட்டி ஒன்றை எடுத்துவந்து தருவோம்னு ஒரு ஓரமா நினைத்து கொண்டு இருந்தேன் .
நான்கு நாலுக்கு முன்னதாக Grocessory காக வெளியில் சென்று இருந்தேன் .ஒரு நாய் குட்டி ரோட்டில் எதாவது கிடைக்குமா என்று ரோட்டில் நின்று கொண்டு இருந்தது மாரு கணம் யோசிக்கவில்லை தூகிகொண்டேன்.சற்று பயந்தாலும் என் கையோடு ஒற்றிக்கொண்டது .
பைக்கில் வரும் பொழுது என் மனைவி மற்றும் என் மகளின் சந்தோசம் எப்படி இருக்கும் என்பதை பற்றியே இருந்தது .வீடு வந்தடைத்தேன் , என் மனைவியும் மகளும் பேரானந்தத்தில் .!
நாங்கள் மூவரும் அந்த குட்டியை குளிக்கவைத்தோம் .பிறகு என் மகளும் என்மனைவியும் அதோடு விளையாட தொடங்கி விட்டனர். எங்களோட வேகமாக நெருங்கி வருவதை உணர்தோம் .
என்ன பெயர் என்று கேட்டேன் ஜாக்கி என்று வைக்கலாம் என்று மனைவி சொல்ல நானும் ஆமோதித்தேன் .!
எண்களின் உலககிற்கு ஒரு புது உறவு இனி என்று எண்ணி அந்த இரவு ஓடியது .என் Workstation பக்கமாகவே படுக்க வைத்துக்கொண்டேன் .அது எண்களோடும் என் மகளுக்கு நல்ல நண்பனாக இருக்க போகிறது என்று கனவோடு இரவு கழிந்தது .
நான் காலையில் நேரம் கழித்தே எழுத்தேன் .என் மனைவி ஜாக்கி ஏதும் சாப்பிடல .வாந்தியும் வயிற்று போக்கும் இருக்கு என்ற சொன்னார் .! நாங்கள் மூவரும் சிறுது நேரத்தில் அருகில் உள்ள petclinic சென்றோம் .
Lockdown என்பதால் டாக்டர் இல்லை உடனடியாக பக்கம் உள்ள அரசாங்க ஹோச்பிடலுக்கு சென்றோம் .அவர் அதற்கு ஒரு injection கொடுத்தார் .எதவும் சாப்பிடவில்லை என்றால் பக்கத்தில் உள்ள Hospital சென்று கட்டவும் என்றார் Saline போடுங்கள் என்றார் .நாங்கள் தாமதம் ஏதும் இன்றி சென்றோம் ஆனால் அங்கு போடா முடியவில்லை
எங்களோடு ஜாக்கியின் முதல் பயணம் அது .என் மனைவியின் குரலுக்கு கண்களை அசைத்தும் வாலாலும் அதின் அன்பை காட்டியது .
வீடு வந்தடைத்தோம் இருப்பினும் என் மனைவி ஜாக்கியை பற்றிய கவலையோடு இருந்தார் .நான் மாலை தூரம் உள்ள ஒரு தனியார் petclinic அழைத்து போறேன் என்று கூறி ஜாக்கியை பார்த்து Dontworry you be alrightnu சொல்லி அதன் முகம் பார்த்தேன் . சரி என்று கண்ணால் காட்டியதுபோல் ஒரு உணர்வு எனக்குள் :(
மாலை அப்பொய்ன்ட்மெண்ட் வாங்க போன் செய்தேன் .நான் ஒரு critical operation பண்ணி கொண்டு இருக்கேன் ஒரு 7.30 வாருங்கள் என்றார் .என்னக்கு என்ன சொல்வது தெரியவில்லை .அப்டி என்ன பிஸி என்ற ஒரு நக்கலோடு (தவறு ) . 7 மன்னிகே சென்று விட்டேன் .போகும் வழி எங்கும் .அதற்கு ஆறுதல் சொல்லி கொண்டே - ஜாக்கி நீ நெடு தூரம் எங்களோட வரபோகிறாய் , உன் அன்பு தங்கையோட துணையாக இருக்க போகிறாய் .மகிழ்ச்சியோடு இருக்க போகிறாய் சொல்லி கொண்டு இருந்தேன் .
Doctor டெஸ்ட் செய்துவிட்டு இது Paro disease -climate change ஆல் வரும் - பிழைப்பது 50% என்றார் - உடைந்து போனேன் .எப்படி என் மனைவியிடம் சொல்வது என்று தெரியாமல் Message செய்தேன் .உடனே call ennachu என்று .50% chances இருக்கு தொடர்ந்து 5 நாட்கள் treatment எடுக்க வேண்டும் என்றார் என்றேன் .உடனே ஜாக்கி selain மற்றும் இன்ஜெக்ஷன் கொடுக்க பட்டது - ஜாக்கி பார்த்து கொண்டு இருந்தேன் . அது பாவமாக என்னை பார்த்து கொண்டு இருந்தத்த்து .முடிந்து வரும் பொழுது பொழச்சுக்கும்ல கேட்டேன் .பார்க்கலாம் என்றார் மருத்துவர் .
நீ எங்களோட இருப்பாய் worry பண்ணதுன்னு ஜாக்கியை அணைத்து கொண்டேன் . என்னை உற்று நோக்கியது .நான் சொன்னது அதற்க புரிந்ததோ தெரியவில்லை .
வீடு வந்தடைந்தேன் என் மனைவியும் மக்களும் ஜாக்கியை உள்ளே தூக்கி சென்றனர். என் மனைவி என்னிடம் - ஜாக்கி பெயரை மாற்றிவிட்டேன் சிறுவயதில் பூனைக்கு இதே பெயர்வைத்தேன் அது இறந்து விட்டது அதனால நான் கறுப்பா என்று பெயர்வைக்க போகிறேன் என்றார் .நம்பிக்கை பெயர்மாற்றிதில் இல்லை என்னினும் -என் மனைவியின் கவலையை போக்க மற்றும் அந்த பெயர் இன்னும் நெருக்கத்தை தந்தது .நாங்கள் மூவரும் கறுப்பா என்றே அழைக்க தொடக்கினோம் .
ஆகாரம் கொடுத்தாலும் அதை உட்கொல்லும் சக்தி இல்லை அதறகு தொடர்ந்து 3 நாட்கள் இரண்டு முறை செலைன் எடுத்து கொண்டது .இரவவில் கொஞ்சம் நடக்க ஆரமித்தது . என் மனைவி கறுப்பனை எப்படியாது காப்பாற்றிவிடவேண்டும் என்று சொல்லி கொண்டே இருந்தார் . 3 வது நாள் இரவு மிகவும் சோர்வோடு இருந்தது - அதனோட ரத்த போக்கும் அதிகமானது .என் கனவுகள் அனைத்தும் கரைவதை கண்முன்னே .தூக்கம் வரவில்லை காலையில் அழைத்து கொண்டு போய்விடுவோம் என்று எண்ணி கொண்டே இருந்தேன் .எங்களோட இருந்து விடு என்று சொல்லி கொண்டு இருந்தேன் .எப்பொழுதும் வாலை அசைப்பது இம்முறை இல்லை ஆனால் கறுப்பன் என்னை பார்த்துகொன்டே இருந்தான்.காலை 6 மணி அளவில் என் மனைவி தூங்கவில்லையா என்றார் நான் கறுப்பனை கை காட்டினேன் .கறுப்பா என் மனைவி அலைத்தபோது அதே பார்வை . நேரம் கழிய கழிய எங்களை விட்டு விடை பெற்று கொண்டு இருந்தான் கறுப்பன் .
என் மகளும் எழுந்து கறுப்பா என்றழைத்தால் .! என் மகளுக்கு தெரியவில்லை கறுப்பன் இனி அவளோட விளையாட போவதில்லை என்று .வலியால் கத்தி கொண்டு இருந்தான் கறுப்பன் .மனைவிக்கு தெரியாமல் அழுது கொண்டு இருந்தேன் இழக்கப்போகிறோம் என்று உணர்ந்ததால் . சில மணி நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து போனான் கருப்பன் .நாங்கள் முவரும் அவனை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஏரி கரையோரம் அவனை அடக்கம் செய்தோம் .மனமில்லாமல் அங்கிருந்து வீடு வந்தடைத்தாம் . அவன் எங்களை விட்டு போனதை எங்களால் ஏற்க முடியவில்ல 3 நாட்கள் தான் இருப்பினும் அவன் எங்களோட சந்தோசமாக இருந்தது அரைநாள் தான் .அவன் திரும்பி எங்களோட இருக்க போகிறான் என்று நினைப்பு அவன் இழப்பு இந்த வலிய தருகிறது
உறங்கும் பொழுது என் மகளிடம் கறுப்பா ஊருக்கு பொய் இருக்கு வந்து விடும் என்றேன் .தூங்கி விட்டால் .காலை 3 மணி அளவில் எழுந்து உட்கார்ந்து கறுப்பா கறுப்பா என்று அழைத்தபடியே .! கறுப்பா வருவான் தூங்கு என்று ஆறுதுல் கூறி உறங்கவைத்தோம்
உயிரின் இழப்பு மனம் தாங்க மறுக்கிறது
கருப்பனின் இந்த நான்கு நாள் நினைவு எங்களுடன் இருக்கவேண்டும் என்பதற்கு இந்த பதிவு .!
We miss you கறுப்பா :( :(
#Parodisease #dogs #love #covidtimes
Comments
Post a Comment